கிளாமர் ரூட்டுக்கு வண்டியை திருப்பும், பிரியா பவானி ஷங்கர்.. ரசிகர்கள் குழப்பம்
photoshoot
priya bhavani shankar
By Kathick
கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். இதன்பின், மேயாத மான் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் முதல் முறையாக கதாநாயகியாக அறிமுகமானார்.
மேலும், தற்போது தொடர்ந்து வரிசையாக பல படங்களில் கமிட்டாகி கோலிவுட்டில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். ஆம், இவர் நடிப்பில் தற்போது ருத்ரன், குருதி ஆட்டம், யானை, பத்து தல உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகின்றன.
இந்நிலையில் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் கலக்கலான புகைப்படங்களை பதிவு செய்து வரும் பிரியா, தற்போதும் அப்படியொரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், கிளாமர் ரூட்டுக்கு வண்டியை திருப்புகிறாரா பிரியா பவானி ஷங்கர் என்று கேட்டு வருகிறார்கள்.