க்யூட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்த பிரியா பவானி சங்கர்..

Priya Bhavani Shankar Indian Actress
By Edward Nov 06, 2022 01:00 PM GMT
Report

செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பின் சீரியலில் வாய்ப்பு கிடைத்து கல்யாணம் முதல் காதல் வரை என்ற விஜய் தொலைக்காட்சி தொடரில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானார் நடிகை பிரியா பவானி சங்கர்.

அந்த சீரியல் கொடுத்த நல்ல வரவேற்பு வெள்ளித்திரையில் கதாநாயகியாக மேயாத மான் படத்தின் மூலம் அறிமுகமாகினார். அதன்பின் கடைக்குட்டி சிங்கர், மான்ஸ்டர், மாஃபியா, ஓ மணப்பெண்ணே, ஹாஸ்டல், பிளட் மணி உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.

யானை, திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து முடித்து விட்டு காதலருடன் வெளிநாட்டில் இரு மாதங்கள் தங்கி நாட்களை கடத்தினார். வெறும் 10, 20 லட்சம் மட்டுமே சம்பளமாக பெற்று வரும் பிரியா பவானி சங்கர் துணை நட்சத்திரமாகவே நடித்து வருகிறார்.

அகிலன், பொம்மை, ருத்ரன், பத்து தல, இந்தியன் 2 போன்ற படங்களில் நடித்தும் வருகிறார். இணையத்தில் சமீபகாலமாக ஒரு புகைப்படங்களை வெளியிட்டு வந்த பிரியா பவானி, சேலையில் ரசிகர்க்ளை கொள்ளுவிட வைக்கும்படியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.