காசுக்காத்தான் நடிக்கிறேன்!! ECR-ல் பங்களா வாங்கியப்பின் உண்மையை உடைத்த நடிகை பிரியா பவானி..
தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி பிரபலமானவர்கள் மத்தியில் செய்தி வாசிப்பாளராக இருந்து சீரியல் நடிகையாக ஜொலித்தவர் நடிகை பிரியா பவானி சங்கர்.
கல்யாணம் முதல் காதல்வரை என்ற சீரியல் மூலம் அனைவரையும் ஈர்த்து வந்த பிரியா பவானி, மேயாத மான் படத்தின் மூலம் கதாநாயகியாக அவதாரம் எடுத்தார். அப்படத்தினை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, யானை, பொம்மை, ஓ மைக் பெண்ணே, ஹாஸ்டல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்தியன் 2, டிமாண்டி காலணி 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்தும் வருகிறார். லட்சத்தில் சம்பளம் வாங்கி வரும் பிரியா பவானி சங்கர் சமீபத்தில் ECR பகுதியில் ஒரு பங்களாவை கட்டிமுடித்து காதலருடன் குடியேறினார்.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், ”தமிழில் நடிக்க வந்தபோது எதிர்காலம் பற்றிய ஒரு திட்டம் எதுவும் இல்லாமல், ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொள்வார்களா? இல்லையா? என்று கவலைப்படவில்லை. நடித்தால் பணம் வருகிறது என நினைத்து தான் நடிக்க வந்தேன்” என்று உண்மையை கூறியுள்ளார்.