பிரேக்கப்-ஆனதும் இப்படியா!!உச்சி மலையில் படுத்தபடி நடிகை பிரியா பவானி சங்கர் வெளியிட்ட புகைப்படம்
செய்தி தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்து சின்னத்திரை சீரியல் நடிகையாக அறிமுகமாகினார் நடிகை பிரியா பவானி சங்கர். கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் கொடுத்த வரவேற்பால் மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், ஓ மனப்பெண்ணே போன்ற படங்களில் கமிட்டாகி கதாநாயகியாகினார்.
அதன்பின் மான்ஸ்டர், மாஃபியா, ஹாஸ்டல், யானை போன்ற படங்களிலும் நடித்து பிஸி நடிகையாகினார். சமீபத்தில் ஈசிஆர் பகுதியில் பங்களா ஒன்றினை வாங்கியும் அதன் பக்கத்திலேயே ரெஸ்டாரெண்ட் ஒன்றினையும் நடத்தி சைஸ் பிசினஸ் செய்து வருகிறார்.
கிளாமர் லுக்கிற்கு மாறாமல் அடக்கவுடக்கமாக நடித்து வரும் பிரியா பவானி சங்கர் தன்னுடைய காதலரை விட்டு இமாச்சலப்பிரதேசத்திற்கு சென்று அங்குள்ள மலைஉச்சியில் செட்டிலாகியுள்ளார்.
சமீபகாலமாக காதலருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரேக்கப் செய்துவிட்டார் என்றும் அதற்காக கொஞ்சம் பிரேக் எடுத்து அவுட் சென்றுள்ளார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் தனியாக கிடைத்த விடுமுறையை ஜாலியாக கொண்டாடி வருகிறார் பிரியா பவானி சங்கர்.
?️??️ pic.twitter.com/73eo4mbjNT
— Priya BhavaniShankar (@priya_Bshankar) March 14, 2023