ஒருவேல பிரேக்கப்பா? காதலருடன் வெளிநாட்டுக்கு பறந்த வீடியோவை வெளியிட்டு உருகிய நடிகை பிரியா பவானி சங்கர்..

Priya Bhavani Shankar Indian Actress
By Edward Aug 04, 2022 04:15 PM GMT
Report

தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்து பின் சின்னத்திரை நடிகையாக பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் கிடைத்த நல்ல வரவேற்பு வெள்ளித்திரையில் அறிமுகப்படுத்தியது.

மேயாத மான், கடைக்குட்டி போன்ற படங்களில் நடித்து கதாநாயகியாகவும் அறிமுகமாகினார். பின் மான்ஸ்டர், மாஃபியா, டைம் என்ன பாஸ் போன்ற படங்களில் நடித்தார். தற்போது பொம்மை படத்தில் எஸ் ஜே சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

கையில் பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் பிரியா பவானி சங்கர் லட்சத்தில் சம்பளம் வாங்கி கார், ஈசிஆர் பங்களா என்று போட்டோஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

தற்போது தான் காதலித்து வரும் காதலருடன் கம்போடியாவுக்கு பறந்து அங்கு எடுத்த சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பழைய நியாபங்களை மறக்க முடியாது என்று கூறி அவர் வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்து ஒருவேலை பிரேக்கப்-ஆ என்று கருத்துக்களை பகிர்ந்தும் வருகிறார்கள்.