காதலரை பிரிஞ்சா அவ்ளோ தான்.. பிரியா பவானியை கண்டித்த அவருடைய அம்மா!!

Priya Bhavani Shankar Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Aug 11, 2024 01:30 PM GMT
Report

தொலைக்காட்சியில் முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்து, பிறகு கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். அதன் பின்னர் இவர் மேயாத மான் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரியா பவானி சங்கர், தனது காதலர் குறித்து பேசியிருக்கிறார். அதில் தனது காதலர் ராஜுக்கும் அவருக்கும் அடுத்த வருடம் திருமணம் நடக்கப்போவதாகவும். ராஜு ஒரு மிகச்சிறந்த மனிதர் என்றும், நான் ஒரு சாதாரண மிடில்கிளாஸ் குடும்பத்திலிருந்து வந்தவள் என்றும் கூறியுள்ளார்.

மேலும், மிடில்கிளாஸ் குடும்பத்தில் இருந்து வந்ததால் சினிமா மற்றும் மீடியா மீது குடும்பத்தினருக்கு எப்போதும் ஒரு அச்சம் இருக்கும் என்றும் ஆனால் ராஜ் அப்படி இல்லை என்றும் தன் காதலரை பற்றி பெருமையாக பேசியுள்ளார்.

ஒருமுறை பிரியா பவானி சங்கரிடம் அவர் அம்மா நீ மட்டும் ராஜை விட்டுட்டு போனால் நான் உன் முகத்திலேயே முழிக்க மாட்டேன் எனவும், அவருடன் சென்று அவர் வீட்டிலேயே தங்கிவிடுவேன் என்றும் அந்த அளவுக்கு என்னைவிட ராஜை அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும் என்று பிரியா பவானி தெரிவித்துளளார்.

காதலரை பிரிஞ்சா அவ்ளோ தான்.. பிரியா பவானியை கண்டித்த அவருடைய அம்மா!! | Priya Bhavani Shankar Talk About Lover