அஜித் குமாரின் வாட்ஸ் அப் DP என்ன தெரியுமா!! குட் பேட் அக்லி ஹீரோயின் ஓப்பன் டாக்..
GBU பிரியா வாரியர்
அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. ஒரு பக்கம் கலவையான விமர்சனங்களை வந்தாலும் ரசிகர்கள் அதை யாவும் காதில் போட்டுக்கொள்ளவில்லை. தங்களது நாயகனை கொண்டாடி வருகிறார்கள்.
5 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் GBU படம் வெற்றிகரமாக கடந்துள்ளது. அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ. 180 கோடி வசூலை ஈட்டியுள்ளது.
குட் பேட் அக்லீ படத்தில் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலுக்கு டான்ஸ் ஆடிய நடிகை பிரியா வாரியர் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி இருக்கிறார்.
இப்படத்தின் பிரமோஷனுக்காக அளித்த பேட்டியொன்றில், அஜித் அவர்களின் நம்பர் உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். அஜித் சார் நம்பர் என்னிடம் இருக்கிறது.
பிரான்ஸ் ரேஸிங்ல இருக்காரு, கால் பண்ணமுடியாது. அவர் போனில் வாட்ஸ் அப் Dp ரேஸிங் போட்டோ தான் வெச்சு இருக்காரு என்று பிரியா வாரியர் கூறியுள்ளார்.