அங்க முத்தம் கொடுக்க ஓகே, ஆனா படுக்கையறை காட்சி.. நடிகை பிரியா மணி வெளிப்படை!
கோலிவுட் சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவர் தான் நடிகை பிரியா மணி. இவர் கடந்த 2004 -ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த காலங்கள் கைது செய் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து தமிழில் சில படங்களில் நடித்து வந்த இவர் பருத்திவீரன் படத்தில் முத்தழகாக நடித்து பிரபலமானார். இப்படத்திற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
கடந்த 2017 -ம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆன இவர், சினிமாவில் இருந்து சற்று விலகி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக இருந்து வந்தார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரியா மணி படத்தில் இருக்கும் நெருக்கமான காட்சிகள் குறித்து பேசினார்.
அதில் அவர் கூறுகையில், படத்தில் நெருக்கமான காட்சி அல்லது படுக்கையறை காட்சியில் நடிக்க மாட்டேன் ஏன் என்றால் அந்த படத்தை குடும்பத்துடன் பார்ப்பார்கள். அவர்கள் பார்க்கும் போது முகம் சுளிக்கும் படி இருக்க கூடாது.
அதுமட்டுமின்றி நான் அப்படி நடித்தால் என் கணவருக்கு பதில் சொல்ல வேண்டும்.
திரைப்படத்தில் கன்னத்தில் முத்தம் கொடுப்பது போன்ற காட்சிகள் இருந்தால் கூட ஓகே ஆனால் படுக்கையறை காட்சி போன்று இருந்தால் நடிக்க மாட்டேன் என்று பிரியா மணி வெளிப்படையாக பேசியுள்ளார்.