நம்ம பிரியங்கா மோகனா இது!! ரசிகர்களை காந்தக்கண்ணால் ஈர்க்கவைக்கும் போட்டோஷூட்..
Priyanka Arul Mohan
By Edward
கன்னட சினிமாவில் நடிகையாக நடித்து அதன்பின் தெலுங்கில் ஒருசில படங்களில் நடித்து வந்தவர் நடிகை பிரியங்கா அருள் மோகன்.
2021ல் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் 100 கோடி வசூலித்து மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. அப்படத்தில் கதாநாயகியாக நடித்து அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தார் பிரியங்கா.
அதன்பின் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் மீண்டும் சிவகார்த்திகேயனின் டான் படத்திலும் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்று வருகிறார்.
தற்போது தனுஷின் கேப்டம் மில்லர் படத்திலும் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்திலும் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக அடக்கவுடக்கமான போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை ஈர்த்து வந்த பிரியங்கா மோகன் தற்போது ரசிகர்களை வாய்ப்பிளக்கும் படியாக பார்வையில் ஈர்க்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.