சூப்பர் சிங்கரில் ஆளையே காணோம் இதுல சிறந்த தொகுப்பாளினியா? வேறு வழியில்லாமல் விருதை கொடுத்தாங்களோ!!

anchor supersinger priyankadeshpande vjpriyanka
By Edward Apr 06, 2022 09:00 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் பலர் தொகுப்பாளர்களாக இந்து வருகிறார்கள். டிடி, ரம்யா, பாவனா, ஜாக்லின் உள்ளிட்ட பல பெண் தொகுப்பாளினிகள் அந்த சேனலில் பல ஆண்டுகளாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்கள்.

ஆனால் தற்போது எப்போவாவது தான் சில நிகழ்ச்சிகளில் பார்க்க முடியும். அவர்கள் எல்லோரையும் தூக்கி போடும் அளவிற்கு உயர்ந்தவர் பிரியங்கா டெஸ்பாண்டே. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியினை கடந்த பல ஆண்டுகளாக மாகாபா ஆனந்துடன் இணைந்து தொகுத்து வழங்கி வந்தார்.

அவருக்காகவே ஸ்டார்ட் மியூசிக் என்ற நிகழ்ச்சியும் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டு பிக்பாஸ் 5 சீசனுக்கு பிரியங்கா சென்றதால் மாகாபாவுடன் மைனா நந்தினி இணைந்து தொகுத்து வழங்கி வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தும் ஒருசில எபிசோட்டிற்கு மட்டுமே பிரியங்கா கலந்து கொண்டார்.

அதன்பின் பிக்பாஸ் நண்பர்களுடன் அவுட்டிங் என இருந்து வந்த பிரியங்காவிற்கு அந்த தொலைக்காட்சி சேனல் சிறந்த தொகுப்பாளினி விருதினை கொடுத்துள்ளது.

ஒரே ஒரு தொகுப்பாளினி மட்டுமே இருந்ததாலும் அந்த விருதினை கொடுத்துள்ளார்கள். மேலும் கடந்த ஒரு ஆண்டுகளாக நிகழ்ச்சிக்கே வராத பிரியங்காவிற்கு எப்படி விருது கொடுக்கலாம் என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.