இதனால் தான் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றேன்.. வேதனையை பகிர்ந்த 40 வயது விஜய் பட நடிகை
பாலிவுட், ஹாலிவுட் படங்களில் கலக்கி வருபவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் 2002 -ம் ஆண்டு தளபதி விஜய்யுடன் சேர்ந்து 'தமிழன்' என்ற படத்தில் நடித்திருந்தார்.
இதன் பின் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த இவர், அமெரிக்க பாடகரான நிக் ஜொனாஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
வாடகைத்தாய்
இவர்களுக்கு திருமணம் ஆகி மூன்று வருடம் கழித்து வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றனர். குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆன நிலையில், தற்போது முதன் முறையாக எதற்காக வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றனர் என்பது குறித்து பேசியுள்ளார் பிரியங்கா.

அதில் அவர், " எனக்கு மருத்துவ ரீதியாக சில பிரச்சனைகள் இருக்கிறது. அதனால் தான் வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றேன். என்னுடைய சிக்கல்களை தெரியாமல் பல பேர் என்னை தவறாக பேசினார்கள். அவர்களின் கருத்து என்னை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. ஆனால் என் குழந்தை பற்றி தவறாக பேசியது தான் எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. என்று கூறியிருந்தார்.
40 வயதான பிரியங்கா அவ்வப்போது தன்னுடைய குழந்தையுடன் எடுத்து கொள்ளும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.