இயக்குனர் ராஜமௌலியுடன் இணையும் 42 வயது நடிகை.. யார் தெரியுமா
S. S. Rajamouli
Mahesh Babu
Priyanka Chopra
By Kathick
இந்திய சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் ராஜமௌலி.
இவருடைய இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த RRR படம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில், அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார்.
இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தின் பட்ஜெட் ரூ. 1000 கோடி என கூறப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடிக்கப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.