பிரியங்காவிற்கு என்ன ஆச்சு? காயங்களுடன் வெளியிட்ட புகைப்படத்தால் ஷாக்காகும் ரசிகர்கள்..

Indian Actress Priyanka Chopra
By Edward May 19, 2022 09:00 AM GMT
Report

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக கோடிகளில் சம்பளம் வாங்கும் டாப் நடிகையாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை பிரியங்கா சோப்ரா. தமிழ் சினிமாவில் தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து பின் தெலுங்கு பாலிவுட் பக்கம் சென்று கொடிக்கட்டி பறந்தார்.

இதன்பின் ஹாலிவுட் படங்களில் நடித்து பிரபலமான பிரியங்கா சோப்ரா பிரபல அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடித்து வரும் பிரியங்கா சமீபத்தில் வாடகைத்தாய் மூலம் பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

தற்போது குழந்தைகளுடன் நேரத்தினை செலவு செய்துவிட்டு மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இந்நிலையில் முகத்தில் படுகாயங்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

கடினமான வேலையில் என்று குறிப்பிட்டு ரத்த காயங்களுடன் இருக்கும் செல்பி புகைப்படத்தை குறிப்பிட்டுள்ளது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Gallery