வெளியேறிய தீபிகா படுகோன், அந்த இடத்தை பிடித்த 43 வயது நடிகை? அவர் சம்பளம் ரூ. 30 கோடி
கல்கி 2898 AD படத்தில் மிகமுக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கவனத்தை பெற்றவர் நடிகை தீபிகா படுகோன். ஆனால் அடுத்த பாகத்தில் அவர் நடிக்கவில்லை, வெளியேறிவிட்டார்.

அவருக்கு பதிலாக வேறு எந்த நடிகை அந்த கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறார் என கேள்வி எழுந்தது. சாய் பல்லவி, ஆலியா பட் போன்ற நடிகைகளின் பெயர் இதில் அடிபட்டது.
ஆனால், தற்போது வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், கல்கி 2898 AD படத்தில் தீபிகா நடித்த கதாபாத்திரத்தில் பிரியங்கா சோப்ரா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. கோலிவுட்வுட்டில் தனது பயணத்தை துவங்கிய பிரியங்கா தற்போது ஹாலிவுட் வரை சென்று கலக்கிக்கொண்டு இருக்கிறார்.

மேலும் தற்போது ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் வாரணாசி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிப்பதற்காக ரூ. 30 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றன.