விஜே பிரியங்காவின் லைஃப் கெட்டுப்போக காரணமே இந்த நடிகரால்-ஆ!! உண்மையை கூறிய KPY பிரபலம்.
விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருபவர் விஜே பிரியங்கா டெஸ்பாண்டே. தன்னுடைய தனித்துவமான காமெடியால் மக்களை மகிழ்ச்சியுடன் நிகழ்ச்சியை எடுத்து செல்லும் குணம் கொண்டவர். சில ஆண்டுகளுக்கு முன் டெக்னீஷியன் பணியாற்றிய பிரவீன் குமாரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு கணவர் புராணம் பாடி வந்த பிரியங்கா கடந்த சில ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல் வெளியானது. அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் பிரியங்கா தன் வேலையை பார்த்து வருகிறார். சுமார் 15 ஆண்டுகளை தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். பிரபல யூடியூப் சேனலில் அவரது 15 ஆண்டுகளாக தொகுப்பாளினி பயணத்தை வைத்து தானா சேர்ந்த கூட்டம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு பிரியங்காவின் மறுபக்கத்தை அலசியிருக்கிறார்கள்.
இந்நிகழ்ச்சியில், அவரது அம்மா, தம்பி, உடன் பணியாற்றியவர்கள், நண்பர்கள், ரசிகர்கள் பலர் பிரியங்காவை பற்றிய அனுபவங்களை பகிர்ந்துள்ளனர். நிகழ்ச்சியில் இனிமேல் முதலில் செய்த தப்பை மீண்டும் செய்யக்கூடாது என்று சத்தியம் வாங்கினார் பிரியங்காவின் அம்மா. இதனை தொடர்ந்து KPY தீனாவும் கலந்து கொண்டு பல விசயங்களை பகிர்ந்திருக்கிறார்.

தீனா தற்போது இயக்குனராக ஒரு படத்தினை இயக்கி நடித்தும் வருகிறார். அதுபற்றி தீனா பேசியபோது, தளபதி விஜய்யை வைத்து இயக்குவீர்களா என்ற கேள்விக்கு, பண்ணிடலாம். அதற்காக உழைப்பை விஜய் சார் செய்து ஒரு உயர்ந்த இடத்தில் இருக்கிறார். நான் விஜய் சாரை நெருங்கனும் அந்த உழைப்பை நானும் போடணும். போட வேண்டி இருக்கு. எடுத்தவுடனே இப்படி ஆகணும் இப்படி ஆகனும் என்ற ஆசை கிடையாது.
ஒரு சோதனை டாக்டர்கள் பண்ணுவாங்க, அதேபோல் தான் என்னை நானே வைத்து இயக்கி வருகிறேன். யாரோட லைஃப்பையும் நாம கெடுக்க வேண்டாம், நம்மையே நாமலே கெடுத்துப்போம் என்று கூறியிருக்கிறார் தீனா. இதை கேட்டு அப்படியெல்லாம் கிடையாது என்று கூற 'இப்போ நான் உன் கூட சேர்ந்து உன் லைஃப்-ஐ கெடுக்கலையா? அந்த மாதிரி நான் சொல்றேன்' என்று தீனா கூறியிருக்கிறார்.
ஒருவேலை பிரியங்கா - கணவர் பிரிவுக்கு தீனாவின் நெருக்கம் தான் காரணமா? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. ஆனால் இருவரும் அக்கா, தம்பி போல் தான் பழகி வருகிறார்கள் என்று பல மேடைகளில் பிரியங்காவே கூறியிருக்கிறார்.