அலைமோதிய ரசிகர்கள் கூட்டம்.. நெரிசலில் சிக்கி அவதிப்பட்ட பிரியங்கா மோகன், வீடியோ இதோ
ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக இருப்பவர் பிரியங்கா மோகன். இவர் நடிப்பில் அண்மையில் OG படம் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்துள்ளது.
திரையுலகில் மிகவும் பிரபலமான இருக்கும் நடிகைகள் துணிக்கடை, நகைக்கடை போன்றவற்றை திறந்து வைப்பது வழக்கமான ஒன்றுதான். அது இணையத்தில் ட்ரெண்ட் ஆகும். அந்த கடைக்கும் நல்ல விளம்பரம் மக்கள் மத்தியில் கிடைக்கும்.
அப்படி ஒரு கடை திறப்பு நிகழ்ச்சிக்கு வரும் நடிகைகளை பார்ப்பதற்கு ரசிகர்கள் பட்டாளம் பெரும் அளவில் கூடுவார்கள். இந்த நிலையில், நடிகை பிரியங்கா மோகன், ஹைதராபாத்தில் உள்ள துணி கடை திறப்பு விழாவுக்கு சென்று இருக்கிறார்.
பிரியங்கா மோகன் கடையின் உள்ளே செல்ல வந்தபோது, அவரை சுற்றி பெரிய அளவில் கூட்டம் கூடிவிட்டது. இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டது. அந்த கூட்ட நெரிசலில் பிரியங்கா மோகனும் சிக்கியுள்ளார். அங்கிருந்து அவர் எப்படி வந்தார் என்பது குறித்து வீடியோ வெளியாகியுள்ளது.
அதை நீங்களே பாருங்க..