உங்க மாமனாருக்கு தகாத முறையில் பிறந்தவர் நான்!! ஆலியாவுக்கு ஷாக் கொடுத்த டாப் நடிகை..
டூ மச் வித் டுவிங்கிள் அண்ட் கஜோல் ஷோ
பாலிவுட் நடிகை கஜோல் மற்றும் டுவிங்கிள் கன்னா இணைந்து, டூ மச் வித் டுவிங்கிள் அண்ட் கஜோல் ஷோ என்ற அமேசான் பிரைம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்கள். அங்கு முதல் வாரம் நடிகர்கள் சல்மான் கான், அமீர் கான் போன்றவர்களும் வருண் தவான், ஆலியா பட் போன்றவர்களும் வந்திருக்கிறார்கள்.
ஆலியா உங்க மாமனாருக்கு
அப்போது ரிஷி கபூரின் மருமகளான ஆலியா பட்டிடம், அக்ஷய் குமாரின் காதல் மனைவியான டுவிங்கிள் கன்னா ஒரு விஷயத்தை கூறியிருக்கிறார். அதாவது, ஆலியாவின் மாமனாரால் நான் கிட்டத்தட்ட ஒரு கபூர் ஆகிவிட்டேன், ஆனால் நான் உங்கள் கணவரின் சகோதரி இல்லை என்று கூறியிருக்கிறார்.
இதற்கு முன் மறைந்த நடிகர் ரிஷி கபூர், டுவிங்கிள் கன்னாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் போட்டதால், ரிஷி கபூருக்கு சட்டவிரோதமாக பிறந்த மகள் தான் டுவிங்கிள் என்று விமர்சிக்கப்பட்டது. அதை மனதில் வைத்துக்கொண்டு தான் டுவிங்கிள் ஆலியா பட்டிடம் கூறியிருக்கிறார்.
ரிஷி கபூரின் ட்வீட்டில், "பிறந்தநாள் வாழ்த்துக்கள் டியர். 1973ல் பாபி படத்தில் நான் உன் அம்மாவுடன் ரொமான்ஸ் செய்தபோது நீ, அவர் வயிற்றில் இருந்தீர்கள்" என்று பதிவிட்டிருந்தார்.
இதைத்தான் பாலிவுட் வட்டாரத்தில் டிம்பிள் கபாடியாவுக்கும் ரிஷி கபூருக்கும் பிறந்த மகள் டிவிங்கிள் என்று கூறப்பட்டு பரபரப்பாக பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.