வாய்ப்புக்காக இதை செய்தாரா நடிகை பிரியங்கா மோகன்.. இப்படி மாற இதான் காரணமா...
கர்நாடகாவை பூர்விகமாக கொண்டு நடிப்பில் கவனம் செலுத்தி தற்போது டாப் நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை பிரியங்கா அருள் மோகன். ஹோம்லியாக டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வரும் பிரியங்காவிற்கு எப்படி சினிமா வாய்ப்பு கிடைத்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மாடலிங் செய்யுமாறு அவரது நண்பர்கள் கூறியதால் அதை செய்து கன்னட மொழியில் வாய்ப்பினை பெற்றிருக்கிறார். அப்போது தனக்கு நடிக்க வருமா? என மனதுக்குள் தயக்கம் இருந்தாலும், இயக்குனர்களின் ஊக்கமும் தைரியமும் தான் பிரியங்காவை கேமரா முன் நிற்க வைத்திருக்கிறது.
அப்படி இருந்தாலும் எல்லா இயக்குனர்களும் தனக்கு ஆதரவாக ஒத்துழைக்க மாட்டார்கள் என்பதை அறிந்து பிரியங்கா மோகன், பெங்களூருவில் ஒரு நடிப்பு பள்ளியில் சேர்ந்து நடிப்பு கலையை கற்று கொண்டு தன்னைத்தானே உருவாக்கிக் கொண்டாராம்.
அப்படி, தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து திறமையை காட்டியிருக்கிறார். பின் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தும், டான் படத்தில் மீண்டும் ஜோடியாக நடித்தும் டாப் இடத்தினை குறுகிய காலக்கட்டத்தில் பிடித்திருக்கிறார்.
இதனை தொடர்ந்து, எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து பெரிதாக பேசப்பட பிரியங்கா மோகன், கேப்டன் மில்லர் படத்தில் கமிட்டாகி, துப்பாக்கி சுடும் ஆக்ஷன் காட்சியிலும் நடித்து திறமையை காட்டி இருக்கிறார். ஆரம்பத்திலேயே நடிப்பு பயிற்சி பெற்றதால் தான் வாய்ப்புகள் பிரியங்கா மோகனுக்கு வரிசைக்கட்டி வருகிறதாம்.