மேடையில் கண்டுக்கொள்ளாத நடிகர் தனுஷ்!! பொறாமையில் முகம் சுழித்த நடிகை பிரியங்கா மோகன்..
கோலிவுட் வட்டாரத்தில் இளசுகளின் பேவரைட் நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் பிரியங்கா மோகன் . தெலுங்கு, கன்னடம் படங்களில் நடித்து வந்த இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதை தொடர்ந்து சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து தோல்வியை சந்தித்தார். தற்போது பவன் கல்யாணின் OG, ஜெயம் ரவியின் பிரதர் போன்ற முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ளார். கடந்த 12 ஆம் தேது அயலானுக்கு போட்டியாக ரிலீஸ் ஆகி 50 கோடிக்கும் மேல் வசூலித்து வருகிறது.
இந்நிலையில், கேப்டன் மில்லர் படம் ரிலீஸ் ஆவதுற்கு முன் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில், இயக்குனர் அருண் மாதஸ்வரன், சிவக்குமார் மற்றும் டெக்னிஷியன்ஸ்களை மட்டும் புகழ்ந்த நடிகர் தனுஷ், அப்படத்தில் முக்கிய ரோலில் நடித்த பிரியன்கா மோகனை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
அதிலும் காஸ்டியூம் டிசைனர் காவியா ஸ்ரீராம் பேர் சொல்லி நன்றி தெரிவித்திருக்கிறார். இதன்பின் பிரியங்கா மோகன் சற்று முகம் சுழித்தபடி ரியாக்ஷன் கொடுத்துள்ள தற்போது வைரலாகி வருகிறது.