என்ன சிம்ரன் இதெல்லாம்!! படுக்கையறை காட்சியில் கலக்கிய சிவகார்த்திகேயன் பட நடிகை..
தமிழ் சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை பிரியங்கா அருள் மோகன். கன்னட சினிமாவில் Ondh Kathe Hella என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தெலுங்கில் Nani's Gang Leader, ஸ்ரீகாரம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 100 கோடி வசூலித்த டாக்டர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார். அதன்பின் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான் படத்தில் நடித்திருந்தார். அதன்பின் சூர்யாவின் எதர்க்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார்.
தற்போது தனுஷின் கேப்டன் மில்லர் உள்ளிட்ட பல படங்களி கமிட்டாகி நடித்து வருகிறார். அடக்கவுடக்கமான ரோலில் நடித்து வரும் பிரியங்கா மோகன், தமிழில் முதன்முதலில் நடித்து அறிமுகமாகிய படம் டிக் டாக். இன்னும் இப்படம் ரிலீஸ் ஆகாமல் இருந்த நிலையில் அப்படத்தின் டிரைலர் வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
ஒருசில தமிழ் படங்களில் நடித்து நல்ல இடத்தில் இருப்பதால் அப்படத்தினை ரிலீஸ் செய்யக்கூடாது என்று பிரியங்கா மோகன் கேட்டுக்கொண்டதால் தான் அப்படத்தினை வெளியிடாமல் வைத்திருந்தனர்.
அப்படத்தின் டிரைலரை யூடியூப்பில் வெளியிட்ட நிலையில் படம் வரும் டிசம்பர் 29ல் வெளியாகவுள்ளது என்ற தகவலையும் அறிவித்துள்ளனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் என்ன பிரியங்கா இதெல்லாம் என்று கதறியபடி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.