Career-ஐ முடிக்க பார்க்கிறீர்களா!! கொந்தளித்த நடிகை பிரியங்கா மோகன்..
கன்னட சினிமாவில் ஸ்ரீகாரம் என்ற படத்தில் நடிகையாக அறிமுகமாகி, அதன்பின் தமிழில் டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன், டிக் டாக் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியங்கா அருள் மோகன்.
படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில் டிக்டாக் படத்தில் படுக்கையறை காட்சியில் நடித்தது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதையெல்லாம் கண்டுக்கொள்ளாத பிரியங்கா மோகன், சமீபத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருந்தார்.
இப்படத்தினை தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் நடித்தும் வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், பிரியங்கா மோகனிடன் தொகுப்பாளினி ஒருவர், சினிமாவில் மோசமான அனுபவம் ஏதாவது சந்தித்து இருக்கிறீர்களா என்று கேட்டுள்ளார்.
அதற்கு பிரியங்கா, இப்போது தான் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறேன். அதற்குள் எனது Career மோசமான அனுபவம் என்று கேட்டால் நான் என்ன சொல்வது. என் சினிமா Career-ஐ முடிக்க பார்க்கிறீர்களா என்று தொகுப்பாளினியையே எதிர்கேள்வி கேட்டு பதில் அளிக்காமல் மழுப்பிவிட்டார்.