சினிமாவிற்கு வருவதற்கு முன்பு அந்த தொழில் செய்த பிரியங்கா மோகன்.. படவாய்ப்பு இப்படி தான் கிடைத்ததா
Priyanka Arul Mohan
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
தற்போது கோலிவுட் வட்டாரத்தில் இளசுகளின் பேவரைட் நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் பிரியங்கா மோகன் .
தெலுங்கு, கன்னடம் படங்களில் நடித்து வந்த இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தற்போது பவன் கல்யாணின் OG, தனுஷின் கேப்டன் மில்லர். ஜெயம் ரவியின் பிரதர் போன்ற முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வருகிறார்.
நடிகை பிரியங்கா மோகன் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே மாடலிங் தொழிலை தான் செய்திருக்கிறார். அந்த சமயத்தில் சிலர் இவர் அழகை பார்த்து கன்னடப் படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பை கொடுத்துள்ளனர். இதை அடுத்து பிரியங்கா மோகன் நடிப்பு கலையில் பயிற்சி எடுத்துக் கொண்டு சிறப்பாக நடிக்க கற்றுக் கொண்டிருக்கிறார்.
இந்த செய்தி தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.