லிஸ்ட் ரொம்ப நீலமா போகுதே!! தனுஷை தொடர்ந்து பிரியங்கா மோகனுக்கு இப்படியொரு ஆசை..
கோலிவுட் வட்டாரத்தில் இளசுகளின் பேவரைட் நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் பிரியங்கா மோகன் . தெலுங்கு, கன்னடம் படங்களில் நடித்து வந்த இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதை தொடர்ந்து சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து தோல்வியை சந்தித்தார். தற்போது பவன் கல்யாணின் OG, ஜெயம் ரவியின் பிரதர் போன்ற முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ளார். கடந்த 12 ஆம் தேது அயலானுக்கு போட்டியாக ரிலீஸ் ஆகி 50 கோடிக்கும் மேல் வசூலித்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், அடுத்தடுத்து யாருடன் நடிக்க ஆசை என்ற கேள்விக்கு நீண்ட பதிலை அளித்திருக்கிறார். தமிழில் இன்னும் கார்த்தி சாருடன் நடிக்கவில்லை அதனால் கார்த்தி சார், தளபதி விஜய், ரஜினி சார் கூட நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நான் நடிக்க ரெடி.
பிரபாஸ், ஜூனியர் என் டி ஆர், ராம்சரண் போன்ற தெலுங்கு நடிகர்களுடன் நடிக்க வேண்டும். கன்னடாவில், யஷ், ரக்ஷித் ரெட்டி எனக்கு ரொம்ப பிடிக்கும். மலையாளத்தில் பகத் பாசில், துல்கர் சல்மான் போன்ற நடிகர்களுடன் நடிக்க ஆசை என்று பிரியங்கா மோகன் கூறியிருக்கிறார். இதனை பலர் கலாய்த்த படி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Enna.. List Neelama poite iruke…..
— Christopher Kanagaraj (@Chrissuccess) January 17, 2024
pic.twitter.com/CC1W2P9sUi