துபாயில் நடிகை பிரியங்கா மோகனுடன் செம ஆட்டம் போட்ட நடிகர்.. ஜாலியா ஜிம்கானா தான்

Priyanka Arul Mohan
By Karthick Raja May 23, 2022 12:41 PM GMT
Report

டாக்டர் படத்தின் மூலம் அறிமுகமாகி, அதன்பின் எதற்கும் துணிந்தவன் டான் ஆகிய படங்களில் நடித்து நம் மனதில் இடம்பிடித்துள்ளார் நடிகை பிரியங்கா மோகன். இதன்பின், விரைவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து தலைவர் 169 படத்தில் பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

நடிகை பிரியங்கா தனது நண்பர்கள் நெல்சன், கவின் மற்றும் பலருடன் சமீபத்தில் துபாய்க்கு விடுமுறையை கொண்டாட சுற்று சென்றிருந்தார். அவர்கள் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் கூட வெளிவந்திருந்தது. இந்நிலையில், தற்போது பிரியங்கா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில், பிரியங்காவுடன் இணைந்து நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி ஆட்டம் போடுகிறார். அதுமட்டுமின்றி, நெல்சன் குடும்பம் மற்றும் கவின், பிரியங்கா, ரெடின் கிங்ஸ்லி அனைவரும் இணைந்து எடுத்துக்கொண்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.