மீனாவிடம் தவறாக நடந்த நபர்.. விஜயகாந்த் செய்த செயலால் மிரண்ட பிரபலங்கள்
விஜயகாந்த்
சினிமாவில் நுழைந்து தனது ஸ்டைல், நடிப்பு மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் நடிகர் விஜயகாந்த். இவருடைய தைரியமான செயல் மற்றும் பேச்சால் மக்களுக்கு பல நன்மைகளை செய்துள்ளார்.
இந்நிலையில், அரசியல், சினிமா என வலம் வந்த மறைந்த விஜயகாந்த் செய்த விஷயம் குறித்து தயாரிப்பாளர் டி சிவா கூறியது தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
விஜயகாந்த் செயல்
அதில், " நட்சத்திர கலைவிழா ஒன்று முன்பு நடைபெற்றது, அப்போது பிரபலங்களை பார்ப்பதற்காக அவர்கள் தங்கி இருந்த ஓட்டல் முன்பு சுமார், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடி இருந்தனர்.
அங்கு சரியான போலீஸ் பாதுகாப்பு இல்லை, இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அந்த சமயத்தில் விஜயகாந்த், நெப்போலியன், சரத்குமார், ஆகியோர் நடிகைகளின் லக்கேஜ்களை பேருந்தில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள்.
அந்த நேரத்தில் ஹெல்மெட் போட்டு கொண்டு அங்கு வந்த நபர் ஒருவர் நடிகை மீனாவிடம் தவறான முறையில் நடந்து கொள்ள முயன்றார். அதை கண்ட விஜயகாந்த் ஹெல்மெட்டை வைத்து அந்த நபர் மண்டையில் ஓங்கி ஒரு அடி அடித்தார்.
இதனால் அந்த நபருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனை கண்டு அனைவரும் வாயடைத்து போய் நின்றனர்" என்று கூறியுள்ளார்.