அந்த இடத்தில் முடியா!! நான் வாய் திறந்தால் சமந்தாவின் மானம் போய்விடும்!! பிரபல தயாரிப்பாளர் மிரட்டல்..
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா பல பிரச்சனைகளுக்கு பின் தற்போது நடிப்பில் ஆர்வம் காட்டி பிஸியாக நடித்து வருகிறார். யசோதா படத்திற்கு பின் அவர் நடிப்பில் பல கோடி பட்ஜெட்டில் சாகுந்தலம் படம் சமீபத்தில் வெளியானது.
சமந்தா பிரமோஷன்
அப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றும் வசூலில் மிகப்பெரிய அடியை பெற்று வருகிறது. இப்படத்திற்காக சமந்தா பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மோசமான தனது உடல்நிலையை பொருட்படுத்தாமல் பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்தார்.
மயோசிடிஸ் நோய் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி சமந்தா எமோஷ்னலாக பேசியிருந்தார். ஆனால் சாகுந்தலம படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியதை பலர் கிண்டல் செய்து விமர்சித்து வந்தனர்.
சிட்டி பாபு
அதில் பிரபல தயாரிப்பாளர் சிட்டி பாபு, சாகுந்தலம் படத்தின் தோல்வியால் சமந்தாவின் சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டது என்றும் தனக்கு நோய் உள்ளதை வைத்து நடித்து விளம்பரம் தேடிக்கொள்கிறார் என்றும் விமர்சித்துள்ளார். அனுதாபமாக பேசி இப்படி சமந்தா செய்த வெறும் விளம்பரம் தான் என்று விமர்சித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, காது மடலில் அதிகமாக முடி வளர்ந்தால் என்ன காரணம் என்று கூகுளில் தேடிப்பார்த்தேன். அது, அதிக ஹார்மோன் சுரப்பதாக அர்த்தம் என்று அறிந்து சிட்டி பாபு பெயரை குறிப்பிடமாக இணையத்தில் பகிர்ந்திருக்கிறார்.
இந்த பதிவு வைரலானதை அடுத்த சமந்தாவை திரும்பவும் சீண்டியிருக்கிறார் தயாரிப்பாளர் சிட்டி பாபு.
என் பெயரை அவர் குறிப்பிடவில்லை. காதில் முடிவை பற்றி பேசாமல் நான் கூறியதற்கு பதிலளித்திருக்கலாம். நான் சமந்தாவை பற்றி வாய் திறந்தால் அவர் மானம் போய்விடும் என்று காட்டமாக கூறி மிரட்டியிருக்கிறார் தயாரிப்பாளர் சிட்டி பாபு. இதற்கு சமந்தா என்ன கூறி பதிலளிக்க போகிறார் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.