நடிக்க தெரியாத அஜித்துக்கு 100 கோடி சம்பளம் எதுக்கு - தயாரிப்பாளர் சர்ச்சை பேச்சு
அஜித் குமார்
தமிழ் நாட்டில் அதிக ரசிகர்கள் கூட்டம் வைத்திருப்பவர் அஜித் குமார். இவர் படத்திற்கு தமிழ் நாட்டில் மிகுந்த எதிர்பார்ப்புண்டு.
அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. இப்படத்தின் பாடல்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. மேலும் அஜித் குமார் எந்த பொது நிகழ்ச்சியில் பங்கேற்பதில்லை. படப்பிடிப்பு முடிந்தவுடன் பைக் எடுத்து கொண்டு சுற்றுலா சென்றுவிடுவார்.
அஜித்துக்கு எதுக்கு 100 கோடி
இந்நிலையில் தயாரிப்பாளர் வெடிமுத்து தற்போது அஜித்தை பற்றி மோசமாக பேசியுள்ளார். அதில் அவர், "என்னை தாலாட்ட வருவாளா படத்தில் அஜித்தை நான் விதவிதமாக நடிக்க சொன்னேன் அனால் அவர் அதுபோல நடிக்கவில்லை.
பிறகு, நான் எப்படி நடிக்க வேண்டும் என்று நடித்து காட்டினேன். இப்படி பட்ட அஜித்துக்கு சம்பளம் மட்டும் 100 கோடி " என கூறியுள்ளார். இவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.