அவங்க வீடியோக்கு அவார்ட்-ஆ? கொந்தளித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சரண்யா...
சரண்யா துரோடி
சின்னத்திரை சீரியல்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த நடிகை தான் சரண்யா துரோடி. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயில் ரோலில் நடித்து வருகிறார். சீரியல் மட்டுமில்லாமல் சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருந்து சில கருத்துகளை பகிர்ந்து வருவார்.

தற்போது அவர் வெளியிட்டுள்ள நீண்ட பதிவு விருது கலாச்சாரம் குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒரு தனியார் ஊடகத்தின் டிஜிட்டல் விருதுவிழாவில் பெஸ்ட் செலிஃபிரட்டி கிரியேட்டார் என்ற பிரிவில் சரண்யா நாமினேட் செய்யப்பட்டுள்ளார். ஆனால் கடைசியில் அவருக்கு விருது கிடைக்கவில்லை. அதன் அதிருப்தியில்தான் அந்த பதிவினை பகிர்ந்துள்ளார்.
அவங்க வீடியோக்கு அவார்ட்
அதில் சரண்யா, ஆரம்பத்திலேயே, இன்று கொஞ்சம் உண்மையான, ஓபனாக ஒரு விஷயம் பேசலாமா? சமீபத்தில் தனியார் டிஜிட்டல் அவார்ட்ஸ் அறிவித்தபோது நானும் நாமினேட்டாகி இருந்தேன். நான் எழுத்து கூட்டி படித்ததிலிருந்து, அந்த பத்திரிக்கையை தான் படித்து வருகிறேன். என்ன படிக்கணும்? உலகத்தை எப்படி பார்க்கணும் என்று நான் படித்த புத்தகங்களும் கட்டுரைகளும் தான் கட்டமைத்தது.
நான் செய்தித்துறைக்கு வந்ததும் அப்படித்தான். அந்தளவுக்கு எனக்கு அந்த பத்திரிக்கை மீது பெரிய நம்பிக்கை இருந்தது. இவங்க நம்மை கவனித்து நாமினேட் பண்ணுனது எனக்கு ரொம்ப ஸ்பெஷலாக, ஒரு உணர்வுபூர்வமான விஷயமாக இருந்தது.

ஆனால் அந்த கேட்டகரியோட பைனல் ரிசல்ட் பார்த்ததும் ஒரு மாதிரி கனமா இருந்தது. வெற்றியாளர் யாருன்னு பார்த்தும் அவங்க, யூடியூப் வீடியோ எல்லம் பார்த்தேன், அதில் கெட் ரெடி வித் மீ வீடியோகள், மேக்கப் விலாக், ஷாப்பிங் விலாக்ஸ், ரெஸ்டாரண்ட் விசிட், மேக்கப் போடலாம வாங்க, பெஸ்ட் பிரண்ட் சர்ப்ரைஸ் பண்ண போறோம் வகை வீடியோக்கள் தான் இருந்தது.
இவங்கதான் சிறந்த செலிபிரிட்டி கண்டண்ட் கிரியேட்டார்? ஆன்லைன்ல எல்லாத்துக்கும் இடமிருக்கும்தான், ஆனால் எதை கொண்டாடுறீங்க எதுக்கு அங்கீகாரம் கொடுக்குறீங்கன்னு பார்க்க வருத்தமா இருக்கு என்று தன்னுடைய சேனல் வீடியோவை ஒப்பிட்டு அந்த பதிவினை பகிர்ந்துள்ளார்.