மீண்டும் விஜய் டிவியில் கரை ஒதுங்கிய புகழ்? சினிமா வாய்ப்பு இல்லையோ
விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்குள் வந்தவர்கள் பலர். சந்தானம், சிவகார்த்திகேயன் என லிஸ்ட் ரொம்ப பெருசு. மேலும் அந்த லிஸ்டில் சமீபத்தில் இணைந்திருந்தவர் புகழ். அவர் விஜய் டிவி குக் வித் கோமாளி மூலமாக பெரிய அளவில் பிரபலம் ஆனவர்.
புகழ் அஜித்தின் வலிமை உட்பட பல படங்களில் நடித்து வந்த நிலையில் தற்போது சில படங்கள் மட்டுமே கைவசம் வைத்திருக்கிறார். மேலும் அவருக்கு புது வாய்ப்புகளும் எதுவும் வரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளி 3ம் சீசனில் அவர் வந்திருக்கும் புகைப்படங்கள் வெளிவந்திருக்கிறது.
இது இரண்டாம் வாரம் தான் என்றாலும் புகழ் கெஸ்ட்டாக தான் வந்திருக்கிறார் என சொல்லப்படுகிறது. அவர் ஷோவுக்கு வந்திருப்பது ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் என்றாலும், பட வாய்ப்புகள் குறைந்ததால் தான் அவர் விஜய் டிவி பக்கம் கரை ஒதுங்கி இருக்கிறார் என்கிற விமர்சனமும் வைக்கப்பட்டு வருகிறது.