இப்படி நடக்கும்னு எதிர்பாக்கல.. 3ம் சீசன் ப்ரொமோ பார்த்து கலக்கத்தில் குக் வித் கோமாளி பேன்ஸ்

Pugazh Vijay Tv Cooku With comali 3
By Parthiban.A Dec 28, 2021 03:40 PM GMT
Report

பிக் பாஸ் ஐந்தாம் சீசன் இன்னும் சில வாரங்களில் முடிய உள்ள நிலையில் விஜய் டிவி அடித்து குக் வித் கோமாளி 3ம் சீசன் துவங்க தயாராகி வருகிறது.

அதன் ப்ரோமோ வீடியோவை விஜய் டிவி சற்று முன்பு வெளியிட்டு இருக்கிறது. அதில் சிவாங்கி, மணிமேகலை, பாலா உள்ளிட்ட பலரும் இருக்கிறார்கள். அவர்கள் CWC செட்டில் அட்ராசிட்டி செய்வது ப்ரொமோவில் காட்டப்பட்டு இருக்கிறது.

ஆனால் புகழ் இந்த ப்ரொமோவில் இடம்பெறவே இல்லை. இது குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு கடும் ஷாக் கொடுத்து இருக்கிறது. இப்படி நடக்கும் என எதிர்பார்க்கல.. அவரை மிஸ் செய்கிறோம் என கமெண்டில் பதிவிட்டு வருகின்றனர்.

புகழ் தற்போது சினிமாவில் பிஸியான கெமெடியனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.