வலிமையோட சந்திக்கிறேன்! தொலைக்காட்சியை கைவிரித்த புகழ்! பின்னணியில் இதுதான் காரணம்.

valimai pugazh ajithkumar vijaytelevision valimaiupdate
By Edward Jul 28, 2021 05:44 PM GMT
Report

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கடந்த இரு ஆண்டுகளாக பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி தான். சமையல் செய்வதை மையமாக வைத்து கோமாளிகளால் அரட்டை அட்டகாசம் என்று மக்களை தன் பக்கம் ஈர்த்த நிகழ்ச்சியாக திகந்து வந்துள்ளது. அதற்கு காரணமாக இருந்தவர்களில் ஒருவர் புகழ்.

கோமாளியாக இருந்து ரம்யா பாண்டியன், தர்ஷா, பவித்ராவிடன் செய்யும் ரொமான்ஸ் வேறொரு இடத்திற்கு கொண்டு சென்றது. இந்நிகழ்ச்சி மூலம் நல்ல வரவேற்பை பெற்ற புகழ், சில படங்களில் கமிட்டாகினார். இந்நிலையில், புகழ் இனிமேல் தொடர்ந்து படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடிக்க இருப்பதாகவும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் இருந்து சற்று விலகுவதாகவும் தகவல்கள் வெளியாகியது.

அதற்கு காரணம் படங்கள் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது இதனை சரியாக பயன்படுத்திக் கொண்டால் மட்டுமே அடுத்தடுத்து படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியும் என்பதற்காகத் தான் புகழ் இந்த முடிவு எடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகின. இந்நிலையில் வலிமையுடன் சந்திக்கிறேன் என்று கூறி ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்துள்ளார் புகழ்.