விஜய் மேனேஜர் தானேன்னு மூஞ்சில் புகைத்து தள்ளிய நடிகர்!! புலி தயாரிப்பாளர் ஓப்பன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். தற்போது உச்ச நட்சத்திரமாக இருக்க முக்கிய காரணமாக இருப்பவர் எஸ் ஏ சந்திரசேகர். தன் மகனை எப்படியாவது உயரத்தில் கொண்டு வர பல படங்கள் பிளாப்பாகியும் அவரை மாஸ் நடிகராக்கிய பெருமை எஸ் ஏ சி-க்கு உண்டு.
அப்படி எஸ் ஏ சந்திரசேகரின் பெயரில் விஜய்க்கு PRO-வாக ஒன்ஸ்மோர் படத்தின் மூலம் பணியாற்றி வந்தவர் பி.டி. செல்வகுமார். அப்படத்தில் இருந்து விஜய் படங்களுக்கு பணியாற்றி வந்த செல்வகுமார், புலி படத்தினை தயாரிக்கவும் செய்தார்.

விஜய் பற்றி பல விசயங்களை பகிர்ந்து கொண்ட பி.டி. செல்வகுமார், புலி படத்தின் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துள்ளார். தலைவா, காவலன் படத்தில் நடந்த பிரச்சனையை நான் பார்த்ததை பார்த்து, எனக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பை விஜய் கொடுத்தார்.
புலி படம் தான் முதல் பான் இந்திய படமாக உருவானது. ரஜினி கால்ஷீட்டே கொடுக்காத நடிகை ஸ்ரீதேவி விஜய்க்காக இப்படத்தில் நடித்தார்.
நடிகர் சுதிப்பை கால்ஷீட் கேட்கும் போது என் முகத்தில் சிகரெட் புகையை என் மூஞ்சில் ஊதி, நீ விஜய் மேனேஜர் தானே என்று கேட்டார். படம் வெற்றியா தோல்வியா என்பது முக்கியமில்லை, எனக்கு வாய்ப்பு கொடுத்த பெருந்தன்மையை நான் மறக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.