விஜய்ணா தாக்கப்பட்டார்.. நடிகர் பார்த்திபன் ட்விட்டை வைரலாக்கும் அஜித் ஃபேன்ஸ்
நடிகர் பார்த்திபன் தற்போது இரவின் நிழல் என்ற படத்தை எடுத்து வருகிறார். அந்த படம் நான் லீனியராக சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டு இருக்கிறது என்கிற தகவல் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
இரவின் நிழல் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதற்கு இணையத்தில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. அதற்கு நன்றி கூறி பார்த்திபன் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
"நேற்று மணி சார் (thanks) வெளியிட்ட F Lookக்கு கிடைத்த வரவேற்பு அமோகமானது-முழுவதும் organic! முடிந்த்வரை நானும் retweet’s செய்தேன். இயன்றவரை பரப்புங்கள்.இதுவரை காணாத ஆனால் இதயம் வரை அதிர்வுகள் ஏற்படுத்தக்கூடிய படமாக இருக்கும் பலரும் பகிர்ந்து ஊக்கப் படுத்துங்கள் நண்பர்களே" என பதிவிட்டு இருந்தார்.
இரவில் நிழல் போஸ்டருக்கு கிடைத்த ரெஸ்பான்ஸ் 'Organic' என குறிப்பிட்டு இருப்பது, விஜய்யின் ஜாலியோ ஜிம்கானா பாட்டுக்கு கிடைத்த ரெஸ்பான்ஸ் பற்றி தாக்கி பேசுவது போல இருக்கிறது என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
விஜய் அண்ணா தாக்கப்பட்டார் என அஜித் ஃபேன்ஸ் ட்விட்டரில் ட்ரோல் செய்து வருகின்றனர்.
Organic ?? vijay na thaaamapattara ??
— ? BatMan☄️ (@VVP_17) March 20, 2022
Always supporting your movies sir As a (organic) #AK fan?❤
— karan Billa (@karanku85222099) March 20, 2022