அல்லு அர்ஜுன் முதல் ராஷ்மிகா வரை.. ராக்கா படத்திற்காக பிரபலங்கள் வாங்கும் சம்பளம்..
ராக்கா
பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் ராக்கா. இப்படத்தை அட்லீ இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறார்கள். இப்படத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கிறார்.

இவருடன் இணைந்து தீபிகா படுகோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், ராஷ்மிகா மந்தனா, அனுஷ்கா ஷர்மா, மிருணாள் தாகூர், ஜான்வி கபூர் ஆகியோர் இப்படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் ராக்கா படத்தின் டைட்டில் லுக் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து அடுத்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சம்பளம்
ராக்கா படத்தில் பணிபுரியும் அல்லு அர்ஜுன், அட்லீ, ராஷ்மிகா மந்தனா, தீபிகா மற்றும் மிருணாள் தாகூரின் சம்பள விவரங்கள் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க.
அல்லு அர்ஜுன் - ரூ. 175 கோடி
அட்லீ - ரூ. 100 கோடி
தீபிகா படுகோன் - ரூ. 25 கோடி
ராஷ்மிகா மந்தனா - ரூ. 8 கோடி
மிருணாள் தாகூர் - ரூ. 5 கோடி