முகத்தை மட்டுமே பார்க்கிறார்கள்? நான் அப்படி கூறவில்லை என பதிலளித்த நடிகை..
தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாரா நடித்து நல்ல வரவேற்பு பெற்றப்படம் இமைக்கா நொடிகள். அப்படத்தில் இரண்டாவது ஹீரோயினாக அறிமுகமாகியவர் நடிகை ராஷி கண்ணா. அதர்வாவின் ஜோடிய நடித்த ராஷி கண்ணா தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்தார்.
இமைக்கா நொடிகள் படத்தினை தொடர்ந்து தமிழ், தெலுங்கு என நடித்து வரும் ராஷி கண்ணா நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தென்னிந்தியவில் இருந்து வரும் வாய்ப்பை ஏற்க மறுப்பதாகவும் அங்கு பெண்களுக்கு பாதுபாப்பு இல்லை.
வெறும் முக அழகினை மட்டுமே பார்க்கிறார்கள் என்றும் பொம்மை, மில்கி என அவர்களை விமர்சிக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். இந்த விஷயம் தென்னிந்திய சினிமாவில் சர்ச்சையை ஏற்படுத்த ராஷி கண்ணாவை திட்டி வந்தனர். தற்போது நான் அப்படி சொல்லவில்லை.
பொய்யாக உருவாக்கப்பட்ட தவறாக சித்தரிக்கப்பட்ட செய்திகள், நான் தென்னிந்திய படங்களை பற்றி சொன்னதாக வலம் வருகிறது. சமுகவலைத்தளத்தில் இது போன்ற செய்திகள் பகிரப்பட்டு வருவதால், பணிவோடு கேட்கிறேன் இதை நிறுத்திக்கொள்ளுங்கள்.
எந்த மொழியில் நடித்தாலும் அதன் மீது எனக்கு மிகுந்த மதிப்பு இருக்கிறது. அன்பால நடந்து கொள்ளுங்கள் என்று இன்ஸ்டாகிராம் பதிவில் பதிவிட்டுள்ளார் ராஷி கண்ணா.
??? pic.twitter.com/yQa1nOacEY
— Raashii Khanna (@RaashiiKhanna_) April 6, 2022