காதல் தோல்வி.. படுக்கை அறைக்கு ஓகே சொன்ன ராஷி கண்ணா!..பெரிய குண்டை தூக்கி போட்ட பிரபலம்
மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி எனப் பிற மொழி படங்களில் நடித்து வந்த நடிகை ராஷி கண்ணா, கடந்த 2018 -ம் ஆண்டு நயன்தாராம், அதர்வா நடிப்பில் வெளியான இமைக்க நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து இவர் ஜெயம் ரவி, தனுஷ், விஷால், விஜய் சேதுபதி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தற்போது ராஷி கண்ணா சுந்தர் சி இயக்கத்தில் உருவாகவுள்ள அரண்மனை 2-ம் பாகத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
சினிமா பிரபலங்களின் தனிபட்டவாழ்க்கையை பற்றி பேசி பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளவர் தான் பயில்வான் ரங்கநாதன்.
சமீபத்தில் பயில்வான் நடிகை ராஷி கண்ணா குறித்து பல விஷயங்களை பேசியுள்ளார். அதில் அவர், ராஷி கண்ணா இளம் வயதில் காதல் தோல்வியை சந்தித்தார். இருந்தாலும் அதனால் துவண்டு போகவில்லை, காதலை வெறுக்கவில்லை.
நடிகை ராஷி கண்ணா லிப் லாக், கவர்ச்சி மற்றும் படுக்கையறை காட்சிகளில் நடிக்கத் தயாராக இருக்கிறார். இதனை அவரே பேட்டியில் கூறி இருக்கிறார். மேலும் ராஷி கண்ணா காதல் திருமணம் தான் செய்வேன் என்றும் சபதம் எடுத்திருப்பதாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.