ரொம்ப கோவக்காரியா இருந்ததால் தான் கணவரை பிரிய காரணமா? பிக்பாஸ்க்கு சென்ற ரக்ஷிதா மகாலட்சுமி..
பிரபல தொலைக்காட்சி சேனலான ஸ்டார் விஜய் டிவியில் 5 ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சி மிகப்பெரியளவில் பிரபலமானதை தொடர்ந்து தற்போது 6 வது சீசனையும் கமல் ஹாசன் நேற்று ஆரம்பித்துள்ளார்.
திருமணம்
எதிர்ப்பாராததை எதிர்பாருங்கள் என்று கமல் ஹாசன் கூறியதை போல இந்த ஆண்டு 20 போட்டியாளர்களை பிக்பாஸ் களமிறங்கியுள்ளார். நிகழ்ச்சியில் சமீபத்தில் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்த நடிகை ரச்சிதா மகாலட்சுமி பிக்பாஸ் 6 கலந்து கொண்டுள்ளார்.
சீரியல் நடிகர் தினேஷை திருமணம் செய்து சில ஆண்டுகள் வாழ்ந்து வந்த ரச்சிதா கணவரை விட்டு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதுகுறித்து இணையத்தில் சில பதிவுகளை பகிர்ந்து வந்தார்.
பிக்பாஸ் 6
இந்நிலையில் பிக்பாஸ் 6ல் செல்ல அவரது அறிமுக வீடியோவில், தான் ரொம்ப கோவக்காரியா என்று பலர் நினைத்து வருகிறார்கள். அதை உடைக்க தான் ஒரு பிளாட்ஃபார்ம்மாக பிக்பாஸ்-க்குள் செல்ல இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
அப்படி அவரின் கோவத்தால் தான் கணவரிடம் இருந்து பிரிய காரணமாக அமைந்ததா என்று பலர் கேள்விகளாக கேட்டு வருகிறார்கள்.