31 வயதில் விவாகரத்தாகாமல் தனிமையில் வாழும் சீரியல் நடிகை ரக்ஷிதா? இதுதான் காரணம்!!
பிரபல தொலைக்காட்சி சேனலில் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் சீரியல் நடிகையாக நடிக்க ஆரம்பித்தவர் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி. இந்த சீரியலுக்கு பிறகு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற சரவணன் மீனாட்சி தொடரில் 2 மற்றும் 3வது சீசனில் மீனாட்சியாக நடித்து பிரபலமானார்.
மக்கள் மத்தியில் தீரா இடம் பிடித்த ரக்ஷிதா, 2015ல் சீரியல் நடிகர் தினேஷ் கோபாலசாமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நாச்சியார் என்ற சீரியலில் இருவரும் ஜோடியாக நடித்தனர். சீரியல் வெற்றி பெறாததால் சீரியலை சீக்கிரமே முடித்துவிட்டனர்.
இதைதொடர்ந்து மிர்ச்சி செந்தில் முக்கிய ரோலில் நடித்த நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் திருமணத்திற்கு பிறகும் நடிக்க ஆரம்பித்தார். அந்த சீரியலில் இருந்தும் விலகி வேறொரு தொலைக்காட்சிக்கு தாவி சொல்ல மறந்த கதை என்ற தொடரில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில் சீரியலில் நடிக்க ஆர்வம் காட்டி வந்த ரக்ஷிதா தற்போது தனிமையில் இருப்பதாக சில மாதங்களுக்கு முன் செய்திகள் பரவியது. கணவருக்கும் ரக்ஷிதாவிற்கு இடையில் மனகசப்பு ஏற்பட்டு விவாகரத்து கேட்டுள்ளதாகவும் வதந்தி செய்திகளாக பரவியது.
இதற்கு சமீபத்தில் ரக்ஷிதா சொல்ல மறந்த கதை சீரியலில் நடித்திருப்பது என் வாழ்க்கையில் நடப்பது போன்றுள்ளது என்று தன் வாழ்க்கையில் மோசமாக இருப்பதை மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
ரக்ஷிதா மகாலட்சுமிக்கும் கணவர் தினேஷிற்கு என்ன தான் பிரச்சனை என்ற தகவல் வெளியாகியுள்ளது. திருமணமாகி 9 ஆண்டுகளாகியும் இன்னும் குழந்தை பிறக்காததால் தினேஷ் மனமுடைந்துள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
வாய்ப்புகள் தினேஷிற்கு குறைந்து ரக்ஷிதாவிற்கு அதிகரித்து வருவதும். சினிமா, சீரியல் என ஆர்வம் காட்டி வரும் ரக்ஷிதாவால் இருவருக்கும் சண்டை உருவாகியுள்ளதாம். இதனால் கடந்த ஒரு ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக தான் வாழ்ந்து வருகிறர்களாம்.
பெற்றோர்கள் சேர்த்து வைக்க பேசி வருவதாகவும் இதற்கு தினேஷ், ரக்ஷிதா நடிப்பை விட்டுவிட்டு குழந்தை பெற்று குடும்பத்தை பார்க்க வேண்டும் என்று கூறி வருகிறாராம். இதனால் தான் ரக்ஷிதா மகாலட்சுமி அவரை விட்டு பிரிய தீர்மானமாக உள்ளாராம்.