ராதாரவியை வீட்டுக்கு அழைத்து அசிங்கப்படுத்திய ரஜினிகாந்த்

Rajinikanth Tamil Cinema Radha Ravi
By Tony Nov 26, 2022 03:30 AM GMT
Report

ராதா ரவி

ராதா ரவி தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர். இவர் பல படங்களில் வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ரஜினிகாந்த் குறித்து ராதா ரவி பேசியுள்ளார்.

அதில் ரஜினிகாந்த் அருணாச்சலம் படத்தில் முதலில் என்னை தான் வில்லனாக நடிக்க முடிவெடுத்தார்.

அப்போது அந்த படத்தை பி.வாசு இயக்குவதாக இருந்தது. ஆனால், பிறகு சுந்தர் சி இயக்குனர் ஆனார்.

ராதாரவியை வீட்டுக்கு அழைத்து அசிங்கப்படுத்திய ரஜினிகாந்த் | Radharavi About Rajinikanth

அந்த நேரத்தில் வில்லன் கதாபாத்திரங்கள் மாற, என்னை வீட்டிற்கு அழைத்து ரஜினிகாந்த், இந்த படத்தில் நீங்கள் இல்லை, வேறு வில்லனை கமிட் செய்து விட்டோம் என்றார்.

நான் உடனே ‘இந்த காலத்தில் திறமை உங்களை மாதிரி அதிர்ஷ்டத்தை நம்பி வரவேண்டியுள்ளது’ என கூறினேன். ஒரு நடிகனாக மிக மன வேதனை அடைந்தேன், என்று கூறியுள்ளார்.