காதல் வலையில் சிக்காமல் எஸ்கேப்பான நடிகை ராதிகா! பணத்திற்கு ஆசைப்பட்ட நடிகர்..
80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ராதிகா. பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகையாக கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றார் ராதிகா.
முன்னணி நடிகையாக வளம் வந்த நடிகை ராதிகா ஆரம்பகால சினிமாவில் கிழக்கே போகும் ரயில் படத்தில் நடிகர் சுதாகருக்கு ஜோடியாக நடித்திருந்தார். படப்பிடிப்பின் போது சுதாகரின் விரல் நகம் ராதிகாவின் மேல் பட்டு கீரல் ஏற்பட்டு ரத்தம் வந்துள்ளது.
உடனே ராதிகா சுதாகரை பளார் விட்டுள்ளார் ராதிகா. இதன்பின் நடிகர் சுதாகருடன் 13 படங்களில் நடித்து ஜோடி சேர்ந்த ராதிகா கெமிஸ்ட்ரி நன்றாகவுள்ளது என்று பலரால் பாராட்டப்பட்டனர்.
பின் இருவரும் காதலித்து வந்த சமயத்தில் ராதிகாவிடம் இருக்கும் பணத்தில் கவனம் செலுத்தியுள்ளார் சுதாகர். பணத்திற்காக ராதிகாவை கல்யாணம் செய்ய திட்டமிட்டதை அறிந்து சுதாரித்து கொண்டு ராதிகா அவரைவிட்டு எஸ்கேப்பாகியுள்ளார். குடிப்பழக்கத்தில் அதிகமாக அடிக்ட்டாகியது ஒரு காரணமாக கூறப்படுகிறது.