பேச்சுலர்ஸ் ரூம்ல ரெடியாக சொன்னாங்க..எவ்ளோ நாள் அட்ஜஸ்ட் பண்றது..சன் டிவி சீரியல் நடிகை ராதிகா பகிர் தகவல்
சன் டிவியில் ஒளிபரப்பான பூவே உனக்காக சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ராதிகா பிரீத்தி. இந்த சீரியலில் முக்கியமான ரோலில் நடித்து வந்த இவர் பின்னர் பாதிலேயே வெளியேறிவிட்டார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ராதிகா பிரீத்தி,பூவே உனக்காக சீரியலில் இருந்து விலகியது குறித்து பேசியுள்ளார். அதில அவர் கூறுகையில், நான் சீரியலில் நடித்து கொண்டு இருக்கும் போது ஒரு பேச்சுலர்ஸ் இருக்கும் ரூமுக்கு சென்று ரெடியாக சொன்னார்கள். அங்கே ஒரு நபர் ஷர்ட் இல்லாமல் இருந்தார்.
நான் உள்ளே சென்று பிறகும் அந்த நபர் எழுந்து கூட செல்லவில்லை. அந்த மாதிரியான இடத்தில எப்படி நான் தயாராக முடியும். பெரிய ஆர்டிஸ்ட் எல்லாம் எங்கெங்கோ சென்று தயாராகிறார்கள்.
உனக்கு என்ன வந்தது என கேட்கிறார்கள்.எவ்ளோ நாள் அட்ஜஸ்ட் செய்து நடிப்பது. ஹோட்டல் சாப்பாடு மற்றும் புரோடக்ஷன் சாப்பாடு என வெளியில் சாப்பிட்டதால் உடலில் ஏகப்பட்டபிரச்சனை எனக்கு வந்தது என்று பிரீத்தி கூறியுள்ளார்.