நடுராத்திரியில் ரெண்டு நடிகைகளுடன் கார் ரேஸ்..ரஜினிகாந்தின் அட்ராசிட்டி!! பிரபல நடிகை...
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவை சூப்பர் ஸ்டாராகவும், இந்திய சினிமாவில் தலைவா என்றும் புகழப்பட்டு வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். சமீபத்தில் அவர் நடிப்பில் கூலி படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை வசூலையும் பெற்றது.
இதனை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் நடிகர் ராதிகா, ரஜினிகாந்துடன் நடித்தபோது நடந்த ஒரு சம்பத்தை சில ஆண்டுகளுக்கு முன் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார்.
நடிகைகளுடன் கார் ரேஸ்
அதில், போக்கிரி ராஜா படத்தில் நான் ரஜினியுடன் நடித்தபோது, சில சமயங்களில் நள்ளிரவு 2, 3 மணிக்கு ஷூட்டிங் முடியும்.
அப்போது நான் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி ஆகிய மூன்று பேரும் யார் முதலில் வீட்டுக்கு செல்வது என்று கார் ரேஸ் எல்லாம் வைத்துக்கொள்வோம்.
அதேபோல் அவர் பாம்பை கையில் பிடித்து கலாட்டா செய்வார். நான் ஓடி விடுவேன். ஸ்ரீதேவியோ மம்மி மம்மி என்று அழுதபடி இருப்பார் என்று ராதிகா பகிர்ந்துள்ளார்.