தீபிகா, ஆலியாவுக்கு ஒரு நியாயம், எனக்கு வேறு நியாயமா? ராதிகா ஆப்தே பளீர் ஸ்பீச்..

Keerthy Suresh Radhika Apte Alia Bhatt Deepika Padukone
By Jai Oct 27, 2026 04:45 PM GMT
Report

நடிகை கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே இணைந்து நடித்த அக்கா என்ற இணையத் தொடர் அக்டோபர் 30 ஆம் தேதி நெல்ஃபிளிக்ஸ் தளத்தில் ரிலீஸாகவுள்ளது. இத்தொடரின் பிரமோஷனுக்காக பேட்டிகளில் கலந்து கொண்டு வரும் கீர்த்தி, ராதிகா ஒருசில விஷயங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

தீபிகா, ஆலியாவுக்கு ஒரு நியாயம், எனக்கு வேறு நியாயமா? ராதிகா ஆப்தே பளீர் ஸ்பீச்.. | Radhikaapte I M Not Alia Bhatt Or Deepika Padukone

அந்தவகையில் நடிகை ராதிகா அளித்த பேட்டியில், ஒரு படம் தியேட்டர்களில் வெற்றிப் பெறுமா என்பதை முன்கூட்டியே கணிப்பது கடினம். தீபிகா படுகோன், ஆலியா பட் போன்ற நடிகைகள் நடித்தால் படத்திற்கு முதல் நாளிலேயே நல்ல வரவேற்ப் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

தனக்கு அந்த அளவிலான தொடக்க நாள் வசூலை பெற்றுத்தரும் செல்வாக்கு இல்லை. இதனால் கதாநாயகர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடிக்க வேண்டிய சூழல் உருவாகிறது. ஒரு படம் திரையரங்கில் ரிலீஸாகிறதா? அல்லது ஓடிடி தளத்தில் ரிலீஸாகிறதா என்பதைவிட, நான் கதையின் தன்மைக்கே முக்கியத்துவம் அளிக்கிறேன்.

தீபிகா, ஆலியாவுக்கு ஒரு நியாயம், எனக்கு வேறு நியாயமா? ராதிகா ஆப்தே பளீர் ஸ்பீச்.. | Radhikaapte I M Not Alia Bhatt Or Deepika Padukone

தற்போது வன்முறையை மையமாகக்கொண்ட படங்கள் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. தாயானப்பின் என் வாழ்க்கையின் பார்வை முற்றிலுமாக மாறியிருக்கிறது, குடும்பத்துடன் நேரம் செலவிடுவதற்கும் முக்கியத்துவம் அளிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.