அஜித்பட வில்லனுடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் பிரபல நடிகை!! அதுவும் 18 வயது வித்தியாசம்..

Actors Indian Actress Relationship
By Jai Apr 21, 2026 07:45 AM GMT
Report

முக்தா கோட்சே

பிரியங்கா சோப்ரா, கங்கனா ரனாவத் ஆகியோருடன் 2008ல் ஃபேஷன் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானவர் தான் நடிகை முக்தா கோட்சே. ஃபேஷன், ஹீரோயின் உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்து பிரபலமான முக்தா, மிஸ் இந்தியா ஃபேஷன் போட்டியில் போட்டியாளர்களில் ஒருவராக இருந்து அரையிறுதி வரை சென்றார்.

சமீபத்தில் ரவி மோகன், அரவிந்த் சாமி நடித்த தனி ஒருவன் படத்தில் வில்லன் அரவிந்த் சாமியின் காதலி ஷில்பா ரோலில் முக்தா நடித்திருப்பார். மகாராஷ்ராவின் புனேவில் பிறந்த முக்தா 2002 மிஸ் கிளாட்ராக்ஸ் மெகா மாடல் பட்டத்தை வென்று சினிமாவுலகில் கால்பதித்தார்.



கடந்த 3 ஆண்டுகளாக படங்களில் நடிக்காத முக்தா, பிரபல நடிகர் ராகுல் தேவ்வுடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறார். அஜித்தின் வேதாளம் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்த ராகுல் தேவ் பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவர்.


அவரின் முதல் மனைவி ரீனா 2009ல் காலமானதை அடுத்து தன்னுடைய மகனை தனியாக வளர்த்து வந்தார் ராகுல். அதன்பின் முக்தா கோட்சேவுடன் நெருக்கம் ஏற்பட்டு இருவரும் லிவ்-இன் வாழ்க்கையை வாழ்து வருகிறார். முக்தாவைவிட ராகுல் சுமார் 18 வயது மூத்தவர். பொதுவெளியில் தற்போது இருவரும் சகஜமாக சுற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.