கிளாமர் ரோல்...அதுக்காக பிகினியில் நடிக்கவும் தயாராக இருக்கேன்!! நடிகை ரைசா வில்சன் ஓபன்...

Tamil Actress Actress Raiza Wilson
By Jai Apr 25, 2026 09:30 AM GMT
Report

நடிகர் தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் கஜோலின் அசிஸ்டண்ட் ரோலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரைசா வில்சன். மாடலிங் துறையில் இருந்து வந்த ரைசா, அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்.

அதன்பின் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தற்போது ஆர்யா நடித்துள்ளர் மிஸ்டர் எக்ஸ் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

கிளாமர் ரோல்...அதுக்காக பிகினியில் நடிக்கவும் தயாராக இருக்கேன்!! நடிகை ரைசா வில்சன் ஓபன்... | Raiza Wilson Says She S Open To Wearing A Bikini

இப்படத்தின் பிரமோஷனுக்காக அளித்த பேட்டியொன்றில் சினிமா பயணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.

பிகினியில்

அதில், மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்த ஆரம்பத்தில் பயமும் பதட்டமும் இருந்தது, ஆனால் அது காலப்போக்கில் கடந்து இன்று படங்களில் முழு கவனம் செலுத்தி வருகிறேன். அதுமட்டுமின்றின் தென்னிந்திய மொழிப் படங்களிலும் கவனம் எலுத்துகிறேன். தன்னை சுற்றி வரும் காதல் வதந்திகள் குறித்து பேசிய ரைசா, இதுவரை நான் யாரையும் காதலிக்கவில்லை, உண்மையான காதலை தேடிக்கொண்டிருக்கிறேன். என் மனதை புரிந்துக் கொள்ளக்கூடிய ஒருவரை சந்தித்தால் நிச்சயம் காதலிப்பேன் என்று கூறியுள்ளார்.

கிளாமர் ரோல்...அதுக்காக பிகினியில் நடிக்கவும் தயாராக இருக்கேன்!! நடிகை ரைசா வில்சன் ஓபன்... | Raiza Wilson Says She S Open To Wearing A Bikini

மேலும் நடிகைகள் கவர்ச்சியான ஆடைகள் அணிவரை விமர்சிப்பது சரியல்ல. ரசிகர்களை மகிழ்விப்பதற்கும் கதைக்கு தேவையாக இருந்தால் மட்டுமே கவர்ச்சியான ஆடை அணியப்படுகிறது. நான் மாடலிங் துறையின் பின்னணியில் இருந்து வந்ததால் பிகினி தவறான ஆடையாக எனக்கு தெரியவில்லை. கதைக்கு தேவையென்றால் அந்த வகை ஆடையிலும் நடிக்க நான் தயார் என்று கூறியிருக்கிறார்.