மகளே கிடையாது சொல்லிட்டு ராஜ் கிரண் செய்த வேலை!! நடிகரை விவாகரத்து செய்த வளர்ப்பு மகள்
தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ராஜ் கிரண், தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ராஜ் கிரணின் வளர்ப்பு மகள் ஜீனத் பிரியா, சீரியல் நடிகர் முனீஸ் ராஜாவை காதலித்து குடும்பத்தை மீறி திருமணம் செய்து கொண்டார்.
இதனால் அவள் என் மகள் இல்லை என்று ராஜ் கிரண் ஓப்பனாக கூறியிருந்தார். இந்நிலையில் திருமணமான ஒரு ஆண்டில் தனது காதல் கணவர் முனீஸ் ராஜாவை பிரிந்துவிட்டதாக அறிவித்திருக்கிறார் ஜீனத் பிரியா. 2022ல் முனிஷ் ராஜாவை திருமணம் செய்த விசயம் மீடியா மூலம் உங்களுக்கு தெரியும்.
தற்போது இருவரும் பிரிந்துவிட்டோம். பிரிந்து இரு மாதங்கள் ஆகிவிட்டது. இது சட்ட பூர்வமான திருமணம் கிடையாது. என் திருமணத்தால் அப்பாவை மிகவும் அசிங்கப்படுத்திவிட்டதாகவும் இவ்வளவு செய்து கஷ்டத்தில் இருக்கும் போது அப்பா வந்து உதவினார்.
அப்பா என்னை மன்னித்து விடுங்கள் நான் இப்படி செய்திருக்க கூடாது என்று ஜீனத் பிரியா தெரிவித்துள்ளார். இதனை நெட்டிசன்கள் இதை தான் முன்பே அப்பா சொன்னார். அப்பா பேச்சை கேட்காமல் திருமணம் செய்து கொண்டீர்கள். இதன்பின்பாவது அப்பா பேச்சை கேட்டு நடந்துகொள்ளுங்கள் என்று அறிவுரை கூறி வருகிறார்கள்.