இப்படியே போனா கர்ப்பம்ன்னு சொல்லுவாங்க ஆலியா! ராஜா ராணியால் குழம்பும் சீரியல் நடிகை..

pregnant serial rajarani2 vjarchana alyamanasa siddhu
By Jai Feb 17, 2022 08:25 PM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களில் மக்கள் மனதை ஈர்த்த சீரியலாக இருப்பது ராஜா ராணி 2. சித்து, ஆலியா மானசா லீட் ரோலில் நடித்து வரும் இந்த சீரியலில் பல பரிமானங்களில் கதையை இயக்கி வருகிறார் இயக்குனர்.

தற்போது பல தப்புகள் செய்து மாட்டிய அர்ச்சனா வீட்டைவிட்டு துறத்தும் நேரத்தில், தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூறி அனைவரையும் சமாளித்துள்ளார். இதனால் சந்தியா மீது கோபத்தில் பழிவாங்க பல பிளான்களை போட ஆரம்பித்துள்ளார். இதனால் கடும்கோபத்தில் நீயா நானா என்ற போட்டி அர்ச்சனாவிற்கும் சந்தியாவிற்கும் இடையே துவங்கியுள்ளது.

இந்நிலையில் நிஜமாகவே 7 மாதம் கர்ப்பமாக இருக்கும் ஆலியா சீரியலில் புடவையை மறைத்தபடி நடித்து வருகிறார். அப்படி கர்ப்பத்தை மறைத்து நடிப்பது அப்படியே அப்பட்டமாக தெரிகிறது. இதை பார்த்து பலர் அர்ச்சனா கர்ப்பமா? சந்தியா கர்ப்பமா? என்று குழம்பி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இதைதொடர்ந்து கர்ப்பம் காரணமாக விரைவில் சீரியலில் இருந்து சந்தியா விலகவுள்ளார் என்ற செய்திகளும் பரவி வருகிறது. அப்படி சீரியலில் இருந்து சில மாதம் சந்தியா விலகிவிட்டால் எப்படி கதையை உருட்ட போகிறார் இயக்குனர் என கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.