ராஜமௌலிக்கு மட்டும் அவ்ளோ.. ஆலியா பட்டுக்கு சம்பளம் இத்தனை கோடி தானா?
பாகுபலிக்கு பிறகு நாடே திரும்பி பார்க்கும் அளவுக்கு வளர்ந்த இயக்குனர் ராஜமௌலி. அவர் இயக்கி இருக்கும் ஆர்ஆர்ஆர் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வரும் ஜனவரி 7ம் தேதி பல மொழிகளில் ரிலீஸ் ஆகி இருக்கிறது.
பாகுபலி படம் மிக பிரம்மாண்ட வசூல் ஈட்டியது என்பதால், தற்போது ராஜமௌலி இயக்கி இருக்கும் ஆர்ஆர்ஆர் படத்தின் பட்ஜெட்டும் மிக அதிகம் ஆகி இருக்கிறது.
தற்போது அந்த படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் பற்றி விவரம் வெளிவந்திருக்கிறது. நடிகர் ராம் சரணுக்கு 45 கோடி, ஜூனியர் என்.டி.ஆருக்கும் 45 கோடி ருபாய் சம்பளம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுக்கு 25 கோடி ருபாய் கொடுக்கப்பட்ட நிலையில் ஆலியா பட்டுக்கு 9 கோடி மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஆனால் ராஜமௌலி படத்தின் லாபத்தில் 30 சதவீத ஷேர் தான் பெறுகிறாராம். படம் சூப்பர் ஹிட் ஆனால் அதுவே மிகப்பெரிய தொகை வரும் என்பது குறிப்பிடத்தக்கது.