ராஜஸ்தான் ரோடு அந்த நடிகையின் அதுபோல் இருக்கனும்! சர்ச்சையை கிளப்பிய அமைச்சர்

இந்திய அரசியல் தலைவர்கள் சிலர் பேசும் சில விஷயங்கள் சர்ச்சையாகி பெரியளவில் பேசப்படும். அதுபோல் சிலர் தவறுதலாகவும் மேடை நாகரீகத்திற்காகவும் சினிமா நட்சத்திரங்களை உதாரணமாக கூறி சிக்கலில் சிக்குவார்கள்.

அப்படி காங்கிரஸ் கட்சியின் ராஜஸ்தான் அமைச்சர் ஒருவர் நடிகையை பற்றி பேசியது சர்ச்சையாகியுள்ளது. ராஜேந்திர சிங் குத்தா சமீபத்தில் முதன்முதலாக அவரின் தொகுதி மக்களை பார்த்து பேசியுள்ளார். அப்போது சாலை சரியில்லை என்று பலர் புகாராக கூறியிருந்தனர்.

அதுபற்றி மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என நினைத்து ராஜஸ்தான் சாலைகள் நடிகை கத்ரீனா கைஃப் கன்னத்தை போல் வழுவழுப்பாக இருக்க வேண்டும் என்று பேசியுள்ளார். அவர் பேசியது அந்த மக்களுக்கு சிரிப்பாக இருந்தாலும் பலர் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்