சூப்பர் ஸ்டார் எடுத்த விபரீத முடிவு! கடும்கோபத்தில் திட்டிய பாலச்சந்தர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த என்ற பெயர் உலகம் முழுவதும் பிரதிபளிக்க காரணமாக இருந்தவர் கே பாலச்சந்தர். பல கலைஞர்களை உருவாக்கிய பாலச்சந்தர் ரஜினியின் வாழ்க்கையில் பல மாற்றங்களை கொடுத்து உருவாக்கினார். அப்படி தன் பிள்ளைப்போல் வளர்ந்து ஆளாக்கிய பாலச்சாந்தர் ஒரு சமயத்தில் கடுமையாக ரஜினியை திட்டியுள்ளார்.
ஆரம்பகாலத்தில் சினிமாவில் அதீத அன்பு வைத்து நடித்து வந்த ரஜினி ஒரு கட்டத்தில் தனக்கு ஓய்வு தேவைப்படுகிறது என்று கூறி சினிமாவிற்கு முழுக்கு போட நினைத்திருந்தார். இதனை நடிகர் சிவக்குமாரிடம் கூறியுள்ளார்.
இந்த செய்தி கே பாலச்சந்தர் காதுக்கு எட்ட ரஜினியை பார்த்து யாரைக்கேட்டு இந்த முடிவை எடுத்தாய் என்று திட்டியுள்ளார். உன்னை நான் வளர்த்ததெல்லாம் வீனா போயிடும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து ரஜினி ஆறுதலாக பேச, சினிமாவில் இப்படியான கஷ்டம் நடக்கத்தான் செய்யும். இந்த முடிவை விட்டுவிடு. வருங்காலத்தில் இந்த நாட்டையே வழிநடத்தும் திறன் உன்னிடம் இருக்கிறது என்று அறிவுரை கூறியுள்ளார். இதுதான் வளர்த்த பாசம்.